நெல்லையில் மூன்று பேர் தீக்குளிப்பு; இருவர் பலி

நெல்லை மாவட்டம் முன்னீர்ப்பள்ளம் அருகே ஆரைக்குளம் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக தாய் ,தந்தை, மகன் உள்ளிட்ட மூன்று பேர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சி. ஒரு நபர் தீக்காயங்களுடன் வீட்டின் வெளியிலும், இரண்டு நபர்கள் வீட்டின் உள்ளே வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். உடனடியாக நீர் தாங்கி வண்டி மூலம் நீர் செலுத்தி தீயணைக்கப்பட்டு உள்ளிருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டனர். தீவிபத்தில் 1) சகரியா, ஆண் வயது 65, 2) மெர்சி, பெண் வயது 58, 3)வினோ, ஆண் வயது 27 ஆகிய மூன்று நபர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மெர்சி மற்றும் ஹார்லி பினோஆகியோர் ம்ருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியாயினர்.சகாரியா ஆபத்தான நிலையில் தீக்காயத்துடன் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.முன்னீர்பள்ளம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags : நெல்லையில் மூன்று பேர் தீக்குளிப்பு; இருவர் பலி