சிப்காட் தொழிற்சாலையில் விபத்து உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்.

கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலையில் நேற்று (ஆக.23), சுவர் இடிந்து விழுந்ததில் கட்டுமான பணியில் ஈடுபட்ட இளமதி (35) மற்றும் இந்திரா (32) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடலூர் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க தொழிற்சாலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், குடும்பத்தில் 2 பேருக்கு வேலை வழங்கவும் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags : சிப்காட் தொழிற்சாலையில் விபத்து உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்