குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிப்பு குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.

by Editor / 17-01-2022 07:48:34pm
குடியரசு தின அணிவகுப்பில்  நிராகரிப்பு  குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.

தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் டி.ஆர்.பாலு தலைமையில்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று நேரில் சந்தித்தனர்.அப்போது அந்த குழுவினர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர் இந்த சம்பவம் குறித்து என்னவென்று  விசாரிப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 

குடியரசு தின அணிவகுப்பில்  நிராகரிப்பு  குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி.
 

Tags :

Share via