போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனை தாக்கிய 4 பேர் கைது

by Staff / 14-05-2024 11:53:17am
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகனை தாக்கிய 4 பேர் கைது

சேலம் ஆத்தூர் அருகே சார்வாய் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவர் ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறாார். இவரது மகன் அஜித்குமார் (21). சேலதில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வருகிறார். அஜித்குமாருக்கும், ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த துரைசாமி மகன் தமிழ்ச்செல்வன் (26), லட்சுமணன் மகன் அருண்குமார் (23), ஜாகிர் உசேன் மகன் நியாஸ் (31), ரவிக்குமார் மகன் ரஞ்சித் (27) ஆகிய 4 பேருக்கும் இடையே முன்விேராதம் இருந்தது. சம்பவத்தன்று ஆத்தூர் விநாயகபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு அஜித்குமாரை 4 பேரும் சேர்ந்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அஜித்குமார் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ஆத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.

 

Tags :

Share via

More stories