ஆம் ஆத்மி கர்நாடக தேர்தல் அறிக்கை வெளியீடு

by Staff / 30-03-2023 12:15:11pm
ஆம் ஆத்மி கர்நாடக தேர்தல் அறிக்கை வெளியீடு

கர்நாடக தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக ஆம் ஆத்மி கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தால் மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், உள்ளூர் ஊழியர்களுக்கு 80 சதவீதம், பெண்களுக்கு அரசு வேலைகளில் 33 சதவீதம் இடஒதுக்கீடு என 10 முக்கிய வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டன. கர்நாடகாவில் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம் ஆத்மி கட்சிகள் களமிறங்குகின்றன.

 

Tags :

Share via
Logo