பெண்ணை கொன்று விழுங்கிய மலைப்பாம்பு

by Staff / 27-10-2022 12:09:14pm
பெண்ணை கொன்று விழுங்கிய மலைப்பாம்பு

இந்தோனேசியா ஜாம்பி மாகாணத்தை சேர்ந்த ஜஹ்ரா(50) என்ற அந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். ஆனால் வேலை முடிந்து அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ரப்பர் தோட்டத்துக்குள் அவரை தேடி சென்றனர். அடுத்த நாள் ரப்பர் தோட்டத்துக்கு அருகில் 16 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று, வயிறு வீங்கிய நிலையில் நகர முடியாமல் கிடந்தது. இதை பார்த்த அவர்கள் மலைப்பாம்பு அவரை கொன்று விழுங்கி இருக்குமோ என அச்சப்பட்டு அதை கொன்று வயிற்றை கிழித்து பார்த்தனர். அப்போது பாம்பின் வயிற்றுக்குள் ஜஹ்ரா பிணமாக இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்துபோயினர்.
 

 

Tags :

Share via