ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை.

கேரளா மாநிலம் கொச்சியில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். பாரில் நடந்த தகராறை தொடர்ந்து ஊழியரை கடத்தியுள்ளனர். அந்த கும்பலில் நடிகையும் இருந்ததாகக் கூறப்பட்டதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகியோர் கைதாகியுள்ளனர். தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் லட்சுமி மேனன் நடித்துள்ளார்
Tags : ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனிடம் போலீசார் விசாரணை.