பல மாவட்டங்களில் தொடர்மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பதிப்பு. ஆலமரம் சாய்ந்தது
நாகப்பட்டினம் ,வேளாங்கண்ணி,திருமருகல், கீழ்வேளூர் திருக்குவளை, திருப்பூண்டி,கீழையூர் காமேஸ்வரம்,விழுந்தமாவடி, காரப்பிடாகை உள்ளிட்ட கனமழை பெய்து வருகிறது.இதன்காரணமாக அந்தபகுதிகளிலுள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கால்வாய்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.இதே போன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார், சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மூன்றாவது நாளாக மழை பெய்து வருவைத்தால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் காரணமாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் கனமழையின் காரணமாக இராட்சத ஆலமரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.குடியிருப்பு நிறைந்த பகுதியில் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Tags :