பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மருதையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

by Editor / 01-01-2022 09:18:47pm
பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட மருதையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தாக்கம் காரணமாக தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் உள்ள மருதையாறு நீர்த்தேக்கத்திலிருந்து இன்று இரவு முதல் விநாடிக்கு 750 கன அடி என்றளவில் தண்ணீர் வெளியேர வாய்ப்புள்ளது.   

எனவே பெரம்பலூர்-அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு கரையோரங்களில் வசிக்கும் பொது மக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, வேடிக்கை பார்க்கவோ அல்லது ஆற்றில் இறங்கி விளையாடவோ வேண்டாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின்  சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo