சின்னம் விவகாரம் - திருமாவளவனை சீண்டிய ஜி.கே.வாசன்

by Staff / 29-03-2024 12:03:51pm
 சின்னம் விவகாரம் - திருமாவளவனை சீண்டிய ஜி.கே.வாசன்

காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் காஞ்சிபுரம் மக்களவை பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியல் கட்சிகள் தங்களது கட்சியின் சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் பெறுவதற்கு முறையாக கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (பாஜக) வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கெட்ட வுட் மோடி என்றவர்களை தேர்தல் வரும்போது மக்கள் கெட்ட வுட் என்று சொல்வார்கள் என தெரிவித்தார்.விசிக வேட்பாளர்களுக்கு பானை சின்னமும், மதிமுக வேட்பாளருக்கு பம்பரம் சின்னமும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக கூட்டணியில் உள்ள அமமுக, தமாகா கட்சிகளுக்கு குக்கர், சைக்களில் சின்னம் கேட்டவுடன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo