இரு மாநில எல்லைகளில் கனிம வள வாகனங்களால் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள் அச்சத்தில் பொதுமக்கள்.

by Editor / 27-09-2024 10:40:43am
இரு மாநில எல்லைகளில் கனிம வள வாகனங்களால் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள் அச்சத்தில் பொதுமக்கள்.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு 24 மணி நேரமும் காய்கறி பால் அரிசி கேஸ் சிலிண்டர் பெட்ரோல் இறைச்சி கோழி உள்ளிட்டவை கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்காகவும் தமிழகத்தில் இருந்து சிமெண்ட் ஜல்லி எம்சன் உள்ளிட்டவை களும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. தற்பொழுது 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் 700 க்கும்  மேற்பட்ட 12 சக்கரங்கள் முதல் 22 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் அளவுக்கு அதிகமாக தென்காசி மாவட்டத்தில் இயங்கிவரும் 49 குவாரிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன தென்காசி மாவட்டத்திலிருந்து நேர கட்டுப்பாடுகளுடன் கனிம வளங்கள் வாகனங்கள் கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதி வேகமாக கேரள மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் கனிமவளவாகனங்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன இதன் தொடர்ச்சியாக கடந்த 24 ஆம் தேதி கேரள மாநிலம் தென்மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடமன் சத்திரமூக்கு பகுதியில் சோபனா என்கின்ற 60 வயது மூதாட்டியும் அவரது மருமகன் அஜித் என்பவர் இருசக்கர வாகனத்தில் புனலூர் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கனிம வளம் ஏற்றுவதற்காக வந்த கனரக லாரி அவர்கள் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் தூக்கி வீசப்பட்டனர் இதில் சோபனா பலத்த காயம் அடைந்தார் மேலும் அதே பகுதியில் பேருந்துக்காக குழந்தைகளுடன் காத்திருந்த பெண்ணும் குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர் இது குறித்து அந்தப் பகுதியினர் உடனடியாக இருசக்கர வாகனங்களில் லாரியை விரட்டிச் சென்று லாரி ஓட்டுனரை பிடித்து தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மூதாட்டி சோபனா திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதே போன்று அதற்கு முன்பு கனரா வாகனம் ஒன்று  தென்மலை உருகுன்னிலுள்ள  டீக்கடைக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து கனிமவளம் கொண்டு வாகனங்களால் இரு மாநில எல்லைப் பகுதிகளில் விபத்துக்கள் பலமணிநேரம்  உள்ளிட்டவைகள் அதிகரித்து வருகின்றன.இதனால் திருவனந்தபுரம் விமானநிலையம்,மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்கு செல்லும் மக்களை பெரும் அவதியடைந்துவருகின்றனர். குறிப்பிட்ட சக்கரங்களுக்கு மேல் இயக்கப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

 

Tags : இரு மாநில எல்லைகளில் கனிம வள வாகனங்களால் அதிகரிக்கும் வாகன விபத்துக்கள் அச்சத்தில் பொதுமக்கள்.

Share via