இன்று முதல் செப்.30ம் தேதி வரை19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

by Editor / 27-09-2024 10:05:37am
இன்று  முதல் செப்.30ம் தேதி வரை19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று (செப்.27) முதல் செப்.30ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : இன்று முதல் செப்.30ம் தேதி வரை19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

Share via

More stories

Logo