சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சந்திப்பு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகளோடு இயங்கியது.

by Editor / 15-01-2025 09:36:04pm
சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சந்திப்பு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகளோடு இயங்கியது.

திருநெல்வேலி: நெல்லை டூ சென்னை வந்தே பாரத் ரயிலின் சேவைக்கான வரவேற்பு பயணிகளிடமிருந்து ஏராளமாக கிடைத்து வரும்நிலையில், இன்று முதல் சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தென்மாவட்ட மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு, வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து காலை 6:05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் 7:50க்கு மதுரை, 9:45க்கு திருச்சி வழியாக மதியம் 1:55 மணிக்கு எழும்பூர் செல்கிறது.

ஏசி பெட்டிகள்: அதேபோல, மறுமார்க்கத்தில் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 6:35க்கு திருச்சி, இரவு 8:20க்கு மதுரை வழியாக இரவு 10:30 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. இந்த ரயிலில் 7 AC சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன..

வாரத்தில் செவ்வாய் தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் இந்த ரயில் கடப்பதாலும், மற்ற ஊர்களுக்கும் செல்ல நேரம் ஒத்துப்போவதாலும், பயணிகளின் பேராதரவை இந்த ரயில் சேவை பெற்று வருகிறது.

வெயிட்டிங் லிஸ்ட்: அதனால்தான், இந்த ரயிலில், வெயிட்டிங் லிஸ்ட் மட்டும் 100க்கும் மேல் எப்போதுமே உள்ளது. பயணிகள் இந்த ரயிலின் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.. கூடுதல் ரயிலை இயக்குவதைவிட, இப்போதுள்ள 8 பெட்டிகளுக்கு பதிலாக 16 பெட்டிகளை இணைத்தால், மிகவும் வசதியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்தபடி இருந்தனர்.

20665 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சந்திப்பு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், பயணிகளின் நலனுக்காக 8 கார் ரேக்கில் இருந்து 16 கார் ரேக்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.இரு முனைகளிலிருந்தும் 16 கார் ரேக்குகளுடன் முதல் ஓட்டம் இன்று,15.01.2025 தொடங்கியது.

 

Tags : சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சந்திப்பு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் 16 பெட்டிகளோடு இயங்கியது.

Share via