மகா கும்பமேளாவின் முதல் 2 நாட்களில் 5.15 கோடி மக்கள் புனித நீராடினர்.

by Editor / 15-01-2025 10:35:01pm
மகா கும்பமேளாவின் முதல் 2 நாட்களில் 5.15 கோடி மக்கள் புனித நீராடினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று துவங்கி பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் நடக்க உள்ளது. 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்களும், துறவிகளும் மஹா கும்பமேளா தினத்தில் கங்கையில் புனித நீராட உள்ளனர். கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சேரும் திரிவேணி சங்கமம் தான் பிரயாக்ராஜ் பகுதி. இங்கு நீராடுவதால் பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. வழக்கமாக கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. இப்போது நடக்கும் கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா உலக சாதனையை முறியடித்துள்ளது. மகா கும்பமேளாவின் முதல் 2 நாட்களில் 5.15 கோடி மக்கள் புனித நீராடினர். மகா கும்பமேளாவின் முதல் நாளில் 1.65 கோடி பேர் நீராடினர். மகர சங்கராந்தி நாளில் 3.50 கோடி பேர் நீராடினர். பாரம்பரிய ஆன்மீக நிகழ்ச்சித் திட்டம் எந்தவித வன்முறையும் இல்லாமல், சாதி அல்லது மதம் சார்ந்து இல்லாமல், யாரையும் புண்படுத்தாமல் தடையின்றி தொடர்கிறது.

 

Tags : மகா கும்பமேளாவின் முதல் 2 நாட்களில் 5.15 கோடி மக்கள் புனித நீராடினர்.

Share via