முதலமைச்சர் மு க ஸ்டாலின் மூத்த தலைவர்நல்லகண்ணுவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் .
இந்திய பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா நல்ல கண்ணு காலமானதை தொடர்ந்து அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைகமான பாலின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாலன் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். வயது முதிர்வு மற்றும் உளநல குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மதியம் 1:55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நல்லகண்ணுவின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்துள்ளார் . மறைந்த பொதுவுடமை இயக்க தலைவர் உடல் மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக தானமாக அவர் விருப்பப்படி வழங்கப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்து வருகின்றனர் .
Tags :


















