பண்டிட் இனத்தவர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம்

காஷ்மீரில் பண்டிட் இனத்தவரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பள்ளியில் ஆசிரியை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பண்டிட் இனத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர் பாதுகாப்பு உறுதி செய்யப்படாத வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட ஆசிரியையை ரஜினியின் உடல் அவருடைய சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
Tags :