பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

by Admin / 26-04-2023 01:26:52pm
 பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 ஊட்டி ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான உறவினர் ரஜ்னேஸ் குட்டன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

 நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பாதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் ..அவர் பள்ளிக்குச் செல்லும் வழிகளில் உறவினர்களோடு பல இடங்களில் தேடிப் பார்த்த போதும் மாணவியை காணவில்லை. இந்நிலையில், காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் மனுவை அளித்தனர். காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தீவிரமாக மாணவியை தேடிய நிலையில் அருகே உள்ள வனப் பகுதியில் மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோணமான நிலையில் இறந்து கிடந்தார் .இதை அடுத்து காவல்துறையினர் மாணவியனுடைய உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்..

மாணவி வழக்கமாக நடந்து பள்ளிக்கு செல்வார் என்றும்பள்ளியிலிருந்து திரும்பி வருகையில் உறவினர்களோ அருகில் உள்ளவர்களோ மோட்டார் வாகனத்திலோ, ஆட்டோ, கார் போன்றவற்றில் அழைத்து வருவர் என்றும் அதேபோன்றே நேற்று தன்னுடைய உறவினரும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வருமான  குட்டன் தன்னுடைய ஆல்ட்டோ காரில் மாணவியை வீட்டில் இறக்கி விடுவதாக சொல்லி அழைத்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை  விட்டு தலைமறைவானவானாா்... அவருடைய கார் அருகில் உள்ள இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் , .அதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் ஆய்வு செய்ததில், மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவியைரஜ்னேஸ்அழைத்து வந்தது உறுதியானது. இதனை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து ரஜ்னேஸ் குட்டனை தீவிரமாக தேடி வந்த நிலையில் ,அவர் ஊட்டி காவல்நிலையத்தில் இன்று சரணடைந்தார்..

 

Tags :

Share via

More stories