வருமான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நேரம் இது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் ஜூலை 31 ஆகும்.
கடந்த ஆண்டுகளில் நடந்தது போல் இந்த ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இன்ஃபோசிஸ் உருவாக்கிய இ-ஃபைலிங் போர்டல் இன்னும் சில தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வருவதாகவும், அதனால் இயல்பு நிலை இல்லை என்றும் வருமான வரித்துறை சமீபத்தில் ட்வீட் செய்திருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
வருமான வரித்துறை அறிக்கையின்படி, இதுவரை 10% வரி செலுத்துவோர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அப்படியானால், வருமான வரித்துறை ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக, வருமான வரித்துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இந்த முறையும் ரிட்டர்ன் சமர்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர்கள் இப்போது கூறுகின்றனர். ஆனால், இது தொடர்பான எந்த உத்தரவையும், வருமானவரித்துறை சார்பில் இதுவரை வெளியிடவில்லை.இந்த ஆண்டு வருமான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31 ஜூலை 2022 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags : Last date for filing income tax returns is 31st July