தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆடை கட்டுபாடு

by Staff / 30-11-2023 02:02:55pm
தஞ்சை பெரிய கோயிலுக்கு ஆடை கட்டுபாடு

உலக பிரசித்தி பெற்றது தஞ்சை பெரிய கோயில், இந்த கோயிலுக்கு புதிதாக ஆடை கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்கள் வேட்டி, பேண்ட், சட்டை அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. புதிதாக ஆடை கட்டுப்பாடு விதித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் வெளிநாட்டினர் சுற்றுலாவுக்கு வந்தால் அவர்களுக்கும் இதே கட்டுபாட என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories