12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை

by Staff / 05-06-2023 02:33:42pm
12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள பெற்றோரை இழந்த குழந்தைகள் காப்பகத்தில் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் காப்பாளர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த சசிகலா(வயது45) என்பவர் காப்பாளராக வேலை செய்து வந்தார். இந்த காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள 12 வயது சிறுவனுக்கு பெண் காப்பாளர் சசிகலா தினமும் இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுவன் காப்பக இல்ல நிர்வாகிகளிடம் புகார் அளித்தார்.

 

Tags :

Share via