கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு சுற்றுப்பயணம்.

இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர், தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளார். பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.மேலும் டிரோன்கள் பறக்கவும் தடைசெய்யப் பட்டுள்ளது.
Tags :