மகர விளக்கு பூஜை ஜனவரி 14 சபரிமலையில் நடைபெற உள்ளது
ஜனவரி 11 இந்தாண்டிற்கான நிறைவு பேட்டை துள்ளலை அம்பளபுழா படைகள் வாவர் பள்ளியிலிருந்தும் நண்பகல் ஆலங்காடு படை பேட்டை சாஸ்தா ஆலயத்திலிருந்தும் துவங்குகிறது.பகவான் வளர்ந்த பந்தள மண்ணிலிருந்து ஜனவரி 12 தேதி வானில் கிருஷ்ண பருந்து காட்சியுடன் பகவானுக்கு சாற்றப்படும் திருவாபரணம் சரண கோசங்களுடன் தனது பயணத்தை துவங்கும் .ஜனவரி 14 தேதி காலை மகர சங்கரம ஆயத்த பூஜைகள் நடைபெறும் பிறகு மதியம் மகர சங்கரம தீபாராதனைக்கு பிறகு நடை அடைக்கப்படும்.சரங்குத்தி வழி திருவாபரணம் சந்நிதானம் சேர்ந்தவுடன் திருவாபரணம் பெறப்பட்டு பகவானுக்கு சாற்றப்பட்டவுடன் வானில் மகர ஜோதியாக நட்சத்திரமாய் பகவான் தோன்ற பொன்னம்பல மேட்டில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்களால் மகர விளக்கு ஏற்றப்பட்டு சந்நிதானத்தில் தர்ம சாஸ்தாவுக்கு தீபாராதனை நடைபெறும்.இந்தாண்டு மகர நட்சத்திர பொழுது கணிக்கப்படுவது ஜனவரி 14 மாலை 8.57 க்கு பிறகு தான் வானில் நட்சத்திரம் இந்த நொடியில் நிகழ வாய்ப்பு உள்ளதாகவே கணிக்கப்படுகிறது.அதேபோல மகர சங்கரம ஆயத்த பூஜைகள் ஜனவரி 14 காலை நடைபெற்றாலும் மகர சங்கரம பூஜை சந்நிதான வழக்கப்படி 8.57 திதிக்கு பிறகு நடைபெறுவது தான் வழக்கம் அதன்படி 8.57 க்கு பிறகு தான் கவுடியார் அரண்மனை நெய்பிசேகம் நடைபெற வேண்டும் அதைபற்றிய முழுமையான தகவல் கூடிய விரைவில் பகிரப்படும்.மகர சங்கரம திதி மற்றும் ஜோதி 14 ஏற்றப்பட்டாலும் மகர சங்கரம புண்ணிய காலம் ஜனவரி 15 தான் ஏற்படுகிறது.பின்னர் தொடர்ந்து ஆறு நாட்கள் பகவான் மணிமண்டபத்தில் இருந்து சரங்குத்தி எழுந்தருளும் பள்ளிவேட்டை நிறைவுக்கு பிறகுஜனவரி 20 பந்தள அரச பிரநிதிகள் தரிசனத்திற்கு பிறகு திருவாபரணம் படி இறக்கப்பட்டு சந்நிதானம் சாற்றப்பட்டு பகவான் யோக நித்திரைக்கு செல்லுவார்.
Tags :