காதலன் யாருக்கு? விஷம் குடித்த 2 காதலிகள்

ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் காதலனுக்காக போட்டி போட்ட 2 காதலிகள் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திவாகர் என்ற இளைஞர் ரேஷ்மா மற்றும் சாரதா என்ற இரு இளம்பெண்களை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் இரு பெண்களுக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், யார் உயிருடன் இருக்கிறோமோ அவர்கள் திவாகரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர். இதில், சாரதா உயிரிழந்த நிலையில், ரேஷ்மாவின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Tags :