தனியார் அருவிக்கு சென்ற ஜீப் கவிழ்ந்து விழுந்த விபத்தில் டிரைவர் பலி.

by Editor / 25-05-2024 08:58:15am
தனியார் அருவிக்கு சென்ற ஜீப் கவிழ்ந்து விழுந்த விபத்தில் டிரைவர் பலி.

தென்காசி மாவட்ட மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போலீசார் குளிக்க தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மேக்கரை பகுதியில் உள்ள தனியார் அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மே 24) தனியார் அருவிக்கு சென்ற ஜீப் கவிழ்ந்து டிரைவர் ரித்தீஷ் (38) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை செய்தும் அதனை மீறி மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதிகளில் குண்டாறு,மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களிலும்,அரசு நிலங்களிலிலும் செயல்படும் தனியார் இடங்களில் அருவிகளை உருவாக்கி சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

Tags : தனியார் அருவிக்கு சென்ற ஜீப் கவிழ்ந்து விழுந்த விபத்தில் டிரைவர் பலி

Share via