இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த உயர்நீதிமன்றம் நிரந்தர தடை

by Staff / 18-03-2024 02:50:40pm
 இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த உயர்நீதிமன்றம்  நிரந்தர தடை

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடைவிதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றையும் பயன்படுத்தக்கூடாது என்ற தடையை உறுதிசெய்தது நீதிமன்றம். அதிமுக சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்துள்ளது.

 

Tags :

Share via