அரசுப் பேருந்தும், டெம்போ வேனும் மோதிய கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அரசுப் பேருந்தும், டெம்போ வேனும் மோதிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வந்த டெம்போ வேன், செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : அரசுப் பேருந்தும், டெம்போ வேனும் மோதிய கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு.