பள்ளி கல்வித்துறையின் புதிய உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் ஒரு வகுப்பறையில் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருந்தால், அவர்களை ஒரு வகுப்பாக கருதி ஒரு ஆங்கில ஆசிரியரை நியமிக்க வேண்டும். அதற்கு குறைவாக மாணவர்கள் இருந்தால், அவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிகளில் ஆங்கில வகுப்பில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த சுற்றறிக்கை பெற்றோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :