கடையநல்லூரில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை - தென்காசியில் பரபரப்பு.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகரப் பகுதியில் உள்ள புதுமனை தெற்கு தெரு என்ற பகுதியில் வசித்து வரும் முகமது அலி என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் சமீபகாலமாக தடை செய்யப்பட்ட அமைப்புகளையும் அதில் இருந்தவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வரும் நிலையில், தற்போது கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவரது வீட்டில் தேசிய புலனாய் அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், முகமது அலி தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
இருந்த போதும் அவரது வீட்டில் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், முகமது அலி தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இருந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தற்போது தெரிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முகமது அலி கடையநல்லூர் முகவரியில் இருந்து தஞ்சாவூர் முகவரியை வைத்து புதியதாக பாஸ்போர்ட் பெற்று 2024 ஆம் ஆண்டு வெளிநாடு சென்றதும் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது அவரது மனைவி முபிலா செல்போனில் உள்ள டேட்டாக்களையும் nia அதிகாரிகள் நகலெடுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன.
Tags : கடையநல்லூரில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் சோதனை - தென்காசியில் பரபரப்பு.