10-வது முறையாக இத்தாலியன் ஓபன் பட்டத்தை வென்ற நடால்

by Editor / 17-05-2021 10:41:41am
10-வது முறையாக இத்தாலியன் ஓபன் பட்டத்தை வென்ற நடால்

இத்தாலியன் ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சைத் தோற்கடித்து 10-வது முறையாகப் பட்டம் வென்றுள்ளார் பிரபல வீரரான நடால்.

ரோமில் நடைபெற்ற இத்தாலியன் ஓபன் இறுதிச்சுற்றில் இரு பிரபல வீரர்கள் மோதியதால் டென்னிஸ் ரசிகர்களிடையே ஆர்வம் உண்டானது. உலகின் நெ.3 வீரரான நடால், 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இத்தாலியன் ஓபன் போட்டியை 10-வது முறையாக வென்றார். 2005-ல் 18 வயதில் இப்பட்டத்தை முதல்முறையாக நடால் வென்றார்.

நடால் - ஜோகோவிச் மோதிய 57-வது ஆட்டம் இது. நடால் 28 முறையும் ஜோகோவிச் 29 முறையும் வென்றுள்ளார்கள். எனினும் ரோமில் இருவரும் 9 முறை மோதி நடால் 6 முறையும் ஜோகோவிச் 3 முறையும் வென்றுள்ளார்கள்.

 

Tags :

Share via