தமிழக,கேரள எல்லையில் மலைப்பகுதியில் குரூவாயூர் ரயிலானது வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் பாதிப்பு.
கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை நோக்கி 14 பெட்டிகளோடு குருவாயூர் மதுரை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த பயணிகள் ரயிலானது தமிழக-கேரளா எல்லைப் பகுதியான நியூ ஆரியங்கா- ஆரியங்காவு இடையே வந்து கொண்டிருந்த போது திடீரென இரண்டு பெட்டிகளுக்கு இடையேயான இணைப்பு கப்லிங் உடைந்துள்ளது.
அப்போது, ரயிலில் இருந்து பயங்கர சத்தம் கேட்டவுடன் ரயிலின் ஓட்டுனர் சுதாரித்துக் கொண்டு உடனடியாக ரயிலை பாதி வழியில் நிறுத்தி, ரயில் பெட்டிகளை சோதனை செய்துள்ளார். 5 பெட்டிகள் ரயில் எஞ்சினோடும் ஒன்பது பெட்டிகள் தனியாகவும் துண்டாகி நின்றுள்ளது அதில் இருந்த பயணிகள் என்ன நடப்பது என்று தெரியாமலேயே பெட்டியில் இருந்து கொண்டுள்ளனர்
அப்போது, அஞ்சாவது பெட்டிக்கும் 6 வதுஇணைக்கும்பெட்டியையும் இரண்டு பெட்டிகளுக்கு இடையான இணைப்பானது கப்லிங் உடைந்திருந்த நிலையில், அதனை தற்காலிகமாக சரி செய்த ஓட்டுனர் மற்றும் பெட்டி காப்பாளர்(guard) அந்த பகுதி மலைப்பகுதி என்பதால் அங்கிருந்து ரயிலை குறைவான வேகத்தில் பகவதிபுரம் ரயில் நிலையம் வரை இயக்கி அதன் பின்னர் செங்கோட்டை ரயில் நிலையம் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், செங்கோட்டை ரயில் நிலையத்தில் உடைந்த இணைப்பானது சரி செய்யப்பட்டது. இந்த பாதிப்பின் காரணமாக 30 நிமிடங்களுக்கு மேலாக ரயிலானது தாமதமானதால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிநர். மலைப்பகுதியில் ரயிலானது வந்து கொண்டிருந்தபோது இந்த பாதிப்பு ஏற்பட்டவுடன் சுதாரித்துக் கொண்ட ரயிலின் ஓட்டுனர் ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : தமிழக,கேரள எல்லையில் மலைப்பகுதியில் குரூவாயூர் ரயிலானது வந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் பாதிப்பு -