ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்-எஸ்பி அதிரடி.
மன்னார்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் நேற்று முன்தினம் நீடாமங்கலம் காவல் நிலைய தலைமை காவலர் ஆர்பிஎப் போலீசார் எனக் கூறி நீடாமங்கலத்தில் ஏற முயற்சித்து கதவை திறக்காததால் திருவாரூர் வந்ததும் அதே பெட்டியில் கதவைத் தட்டி ஏறி கதவை ஏன் திறக்கவில்லை என கேட்டு காலிழந்த மாற்றுத்திறனாளியான திருவாரூர் மாவட்டம் தென்கோவனூரை சேர்ந்த கருணாநிதி என்பவரை கன்னத்தில் இரண்டு முறை அறைந்து தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இன்று காலை திருவாரூர் ரயில்வே போலீசார் தலைமை காவலர் பழனி மீது தகாத வார்த்தைகளால் திட்டுதல் மாற்றுத் திறனாளிகை தாக்குதல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து புதிதாக பொறுப்பேற்ற திருவாரூர் மாவட்ட எஸ்பி கருண் கரட் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
Tags : ரயிலில் மாற்றுத்திறனாளியை தாக்கிய காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்-எஸ்பி அதிரடி.