தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் ,தமிழகத்தின் 38 மாவட்டங்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

by Admin / 22-02-2026 07:37:02am
தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் ,தமிழகத்தின் 38 மாவட்டங்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 சட்டமன்றத் தேர்தலை-2026  முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் ,தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்குத் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், 

மாநில நிர்வாகக் குழுத் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன்

ஆதவ் அர்ஜுனா, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை.

ஜே.சி.டி. பிரபாகர், திருவள்ளூர்.

சத்தியபாமா, கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர்.

முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், தஞ்சாவூர், திருவாரூர், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை.

சி.டி.ஆர். நிர்மல்குமார், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல்.

சாமிநாதன்,புதுச்சேரி மற்றும் காரைக்கால்.

அருண்ராஜ், சேலம். 

 கட்சியின் தலைமைச் செயலகத்தில் உள்ள மத்திய தேர்தல் கட்டுப்பாட்டு அறையுடன்இந்தக் கண்காணிப்பாளர்கள் இணைந்து செயல்படுவார்கள். மாவட்ட - தொகுதி வாரியாக தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தல், பூத் கமிட்டி அமைத்தல்,வாக்குச் சேகரிப்புத் தயார்நிலையை உறுதி செய்தல் இவர்களின் முக்கியப் பணிகளாகும். 
 தவெக தனது முதல் தேர்தல் களத்திற்குத் தயாராவதற்கான அடிப்படை கட்டமைப்பை இந்த நியமனங்கள் மூலம் வலுப்படுத்தியுள்ளது. 

 

Tags :

Share via

More stories