புதுடெல்லியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
புதுடெல்லியில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு வெடிகுண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பழைய டெல்லியில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாந்தினி சௌக்பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாகவும் ஐ.இ.டி வெடிபொருட்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல். கடந்த பிப்ரவரி 6-ம் தேதி , பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்புக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர்-இ-தொய்பா இந்தச் சதித்திட்டத்தைத் தீட்டியுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லி போலீஸார் - மத்திய பாதுகாப்புப் படையினர் முக்கியமான ஆன்மீகத் தலங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்பட்டு, வாகன சோதனைகள் மற்றும் சி.சி.டி.வி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை அருகே கடந்த 2025 நவம்பரில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து,டெல்லி போலீஸார் உச்சகட்ட விழிப்புடன் உள்ளனர். பொதுமக்கள் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது நபர்களைக் கண்டால் உடனடியாகப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :



















