ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு - ராமதாஸ் கேள்வி

by Staff / 23-04-2024 02:17:01pm
ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு - ராமதாஸ் கேள்வி

எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு ஏற்படுவதால், மக்களைக் காக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய்த்தூள் ஆகியவற்றின் விலைகள் கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்துள்ளன. எண்ணெய் விலைகள் லிட்டருக்கு ரூ.30 வரை உயர்ந்திருக்கின்றன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தவாறு மீண்டும் மலிவு விலையில் உளுந்து வழங்க வேண்டும். மளிகைப் பொருட்களையும் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via