அன்புமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -ராமதாஸ் தரப்பு.
பாமக தலைவர் அன்புமணி பொதுக்குழுவை நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக பொதுக்குழுவை கூட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், "பாமக நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதல் இன்றி பொதுக்குழுவை கூட்டுவது சட்ட விரோதம். செயல் தலைவரான அன்புமணிக்கு கட்சியின் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இல்லை” எனவும் ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : அன்புமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் -ராமதாஸ் தரப்பு.



















