இரு மாநில எல்லையில் 20மதங்களுக்குப்பின்னர் பேருந்து இயக்கம் தொடக்கம்.-மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளமாநிலத்திற்கும்,கேரளமாநிலத்திலிருந்து தமிழகத்திற்கும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் 23 ஆம் தேதி இரு மாநில பேருந்துகள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருமாநில எல்லைகளில் வசிக்கும் மக்களும் கேரளாவில் வசிக்கும்,தமிழக மக்களும்,தமிழகத்தில் வசிக்கும் கேரள மக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி தங்கள் பகுதிகளை நோக்கி படையெடுத்து சென்றவண்ணமும்,வந்த வண்ணமும் இருந்தனர்.இந்த நிலையில் முறையாக சோதனை சாவடிகளை அமைத்து இரு மாநில எல்லைகளிலும் சோதனைகள் மேற்கொள்ளபட்டுபின்னரே அனுமதிக்கப்பட்டனர்.மேலும் இ.பஸ் அனுமதி சிட்டுக்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி,ஆர்,டி,பி,சி,ஆர் சோதனைகள் மேற்கொண்டு இருந்தால் மட்டும் அனுமதி என்று இருந்துவருகிறது,எல்லைகளிலுள்ள கொரோனா சோதனை சாவடியில் கேரளா மாநில பேரூந்துக்கள் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்,மேலும் அவர்களிடம் சான்றுகள் இருக்கிறதா என்ற சோதனைகளும் நடத்தப்படுகின்றன.தற்போது 20மாதங்களுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவு படி இன்று முதல் தென்காசி,கன்னியாகுமரி,உள்ளிட்ட இறுமாநில எல்லையோர மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கம் பொதுமக்கள் வரவேற்பு .
இந்த நிலையில் இன்று முதல் அரசு உத்தரவின்படி இரு மாநில பேருந்துகள் இயக்கப்பட்டது.தென்காசி மாவட்டத்திலிருந்து கொல்லம், புனலூர், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரை ஆலப்புழா, ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயங்கப்படுகிறது.இன்று முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைந்த அளவில் பயணம் மேற்கொண்டனர்.தற்போது ஏராளமான மக்கள் பேருந்துகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.தென்காசி,செங்கோட்டை பேருந்து நிலையங்களில் கேரள பேரருந்துக்கள் இயக்கம் காரணமாக வியாபாரிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags :