ஜல்லிகட்டுக்கு துள்ளிகிட்டு வரப்போகும் காளைகள்

by Admin / 13-01-2022 01:48:09am
ஜல்லிகட்டுக்கு துள்ளிகிட்டு வரப்போகும் காளைகள்

 


மதுரை அலங்காநல்லூர் என்றாலே, நம் ஞாபகத்திற்கு வருவது ஜல்லிகட்டுதான்.தமிழர்களின் தொன்மை விளையாட்டு .மன்னர்களின் காலத்தில் போர் இல்லாத பொழுது போர்க்குணம் வீரர்களிடம் மங்கி விடாதிருக்க தினவெடுத்த காளைகளோடு சண்டை இட செய்து வீரர்களின் ஆற்றலை மேம்படுத்த பயன்படும் போர் ப் பயிற்சிக்கூடமாகவே வாடிவாசல் இருந்தது.மாட்டை அடக்கியவனுக்கே மங்கையர் மாலையிட்டதும் வட்டக்கல்லை தூக்கியவனுக்கே வஞ்சியரின் வளையல் கைகள் வாரி அணைத்ததும் தமிழரின் வீரம் வாழ்வியலோடும் பண்பாடடோடும் பின்னி பிணைந்திருந்ததை நாம் அறியமுடியும் .அந்த வகையில் என்ன தான் விஞ்ஞானத்தில் விண்ணையே தொட்டாலும் தொல் தமிழன் தம் பாரம்பரியத்தை இழக்காமல் இன்றைக்கும் மாடுபிடி வீரன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறான்.அவனின் தினவுக்கு தீனியாக ...வருகிறது ஜல்லிகட்டு மதுரை அலங்காநல்லூரில். குறைந்த பார்வையாளருடன் ..ஜல்லிகட்டை நடத்த போகிறது நிர்வாகம்.....4,534 காளைகள் 1,999 மாடு பிடி வீரர்களுடன் ஜல்லிகட்டு நடக்கப்போகிறது..

 

Tags :

Share via