இடை தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது-டி.டி.வி.தினகரன்.

by Editor / 23-01-2023 10:07:40pm
இடை தேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது-டி.டி.வி.தினகரன்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே அமமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அதன் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது 27 ஆம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்படும் என பேட்டியளித்தார்.

சிவகங்கையை அடுத்துள்ள பாகனேரி கிராமத்தில் அமமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் இல்ல திருமண விழாவிற்கு அதன் பொது செயலாளரான டி.டி.வி.தினகரன் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடை தேர்தலில் அமமுக சார்பில் நானே போட்டியிட வாய்ப்புள்ளது. வருகிற 27 ஆம் தேதி வேட்பாளர் யாரென அறிவிக்கப்படும் என தெரிவித்தார். ஒ.பி.எஸ், இ.பி.எஸ் பிரச்சனையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. இவர்களுக்குள்ளேயே பிரச்சனை இருக்கும்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டனி என்பது சாத்தியமில்லை அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்ட்னிக்கு சாத்தியமில்லை என்றும் அதிமுக இரண்டு அனிகளும் இனைவது என்பது  அத்தைக்கு மீசை முளைப்பதுபோல் என தெரிவித்தார்  தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றாததால் திமுகவிற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் பேசினார். இந்த சத்திப்பின்போது ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo