முதலமைச்சரின் பெண் குழந்தைகள் திட்டம்.. முக்கிய அறிவிப்பு

by Editor / 05-06-2025 12:36:36pm
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் திட்டம்.. முக்கிய அறிவிப்பு

ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் பிறந்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதை ஊக்குவிக்கும் வகையில் 2 பெண் குழந்தைகளின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இது அவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் 18 வயதில் முதிர்வடையும். இதற்கு பொது சேவை மையத்தில் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும். பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
 

 

Tags :

Share via

More stories