காயிதே மில்லத் சேவைகளை நினைவுகூர்வோம் - விஜய்

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். அவரது பிறந்தநாளான இன்று (ஜூன் 05) தமிழக வெற்றிக் கழக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் காயிதே மில்லத். சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த காயிதே மில்லத் சேவைகளை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
Tags :