பிரதமர் நரேந்திர மோடிமூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்க பயணம்.
பிரதமர் நரேந்திர மோடிமூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்க பயணம்..பிரதமரின் முதல் நிகழ்வு வில்மின்டன் டெலாவேரில் நடைபெறும் வருடாந்திர குவாட் நிகழ்வாகும்.
பிரதமர்- அமெரிக்க அதிபர் இடையிலான இந்த சந்திப்பின் காரணமாக உலகளாவிய ஒரு கூட்டான்மையை புதுபிப்பதற்கான வாய்ப்பை பெறுவதாக இந்த சந்திப்பு இருக்கும் என்றும் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஒருங்கிணைந்து உலகளாவிய எண்ணத்தை உருவாக்குவதற்கும் காரணமாக அமையும் என்றும் இந் நிகழ்விற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி வில்மின்டனிலிருந்து நியூயார்க்கு சென்று செப்டம்பர் 22-ஆம் தேதி இந்திய வம்சாவளியினர் நடத்தும் சமூக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுவார் என்றும் அதன் பின்னர் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம், பயோ டெக்னாலஜி போன்றவற்றில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் வர்த்தக தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என்றும் தகவல்..
:
Tags :