ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்

by Staff / 01-02-2024 05:07:14pm
ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஒரு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சார்பாக 10 நாட்கள் விசாரணை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது தீர்ப்பு நாளை வழங்கப்படும் என ராஞ்சியில் உள்ள பிஎம்எல்ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார் ஹேமந்த் சோரன். சட்டவிரோத பணப் பரிமாற்றம், நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது.

 

Tags :

Share via

More stories

Logo