மின்சாதனங்களை உபயோகிப்பதால் கண்களில் பிரச்சனை
மின்சாதனங்களை உபயோகிப்பதால் கண்களில் பிரச்சனை ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க சில வழிகளை நாம் பின்பற்றலாம்.
வைட்டமின் நிறைந்த உணவுகள்: வைட்டமின்கள் கண் ஆரோக்கியத்தை அதிக அளவில் பாதுகாக்கும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு (macular degeneration) உள்ளிட்ட சில கண் நோய்களின் அபாயங்களைக் குறைப்பதாக அறியப்படுகிறது.
இதனால்தான் சிறந்த கண் ஆரோக்கியத்திற்காக சிட்ரிக் பழங்கள், கொட்டை வகைகள், விதைகள், மீன் போன்றவற்றை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கண் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்.பச்சை காய்கறிகள்: கீரைகளில் உள்ள லுடீன், ஜீயாக்சாண்டின், வைட்டமின்கள் மற்றும் பீட்டா-கரோட்டின் நம் கண்கள் புற ஊதா கதிர்களின் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
அதிக தண்ணீர் குடிப்பது: நீரேற்றம் பொதுமானதாக இல்லாத போது நம் கண்களுக்கு ஆரோக்கிய தீங்கு ஏற்படும். இதனால் பொதுமான அளவு நீர் அருந்துவது அவசியமாகிறது.
புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்: புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகைபிடிப்பவர்களுக்கு கண் பாதிப்பு வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதானல் புகைபிடிப்பதை தவிர்த்தால் கண் பாதிப்பு குறையும்.
Tags :