கந்து வட்டி கும்பல் மிரட்டலுக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் தர்ணா .

by Editor / 08-06-2024 09:43:10am
கந்து வட்டி கும்பல் மிரட்டலுக்கு பயந்து பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் தர்ணா .

கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கந்து வட்டி கும்பல்களின் அட்டகாசம் தலை தூக்கி உள்ளது புதிய முறையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாததால் கந்துவட்டி கும்பல்களால் பாதிக்கப்படுபவர்கள் மிரட்டப்பட்டு தற்கொலை நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்.  இந்நிலையில்  நாகர்கோவில் வடசேரியில் வசித்து வரும் சரோஜினி என்ற பெண்மணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத தன் கணவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு கட்டமாக மூன்று லட்ச ரூபாய் கோட்டார் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (45) 
த /பெ. பெருமாள் என்பவரிடம் வாங்கியதாக கூறப்படுகிறது இதற்கு 18 மாதமாக மாதந்தோறும் முறையாக வட்டி செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 4,32,000 வட்டி கட்டி உள்ளேன் என்றும் கடனாக வாங்கிய தொகை 3 லட்சம் ஆனால் வட்டியுடன் கட்டிய தொகை 4 லட்சத்து 32,000 கட்டி உள்ளேன்.  மேலும் மணிகண்டன் எங்கள் நிலத்தினை அபகரிக்கும் நோக்கத்தில்  பூதப்பாண்டி பகுதியில் உள்ள எங்களது இடத்தினை தன் பெயருக்கு எழுதி தரும்படியும்  இல்லை என்றால்  உன்  காசோலை , மற்றும் உனது மகளின் பெயரில் உள்ள காசோலைகளை வைத்து நீதிமன்றத்தில் 13 லட்சம் தர வேண்டும் என தான் வழக்கு பதிந்துள்ள வழக்கை திரும்ப பெற முடியாது என        
 மிரட்டி வந்தார். மேலும் எங்களுக்குள் பேசி ரூபாய் மூன்று லட்சம் அவரிடம் திருப்பி கொடுத்தோம் அதனை பெற்றுக் கொண்டு , காசோலை வழக்கை மட்டும் வாபஸ்   வாங்கினார்.மேலும் நான் கொடுத்த காசோலை மற்றும் பிராமிஸ்வரி நோட் ஆகியவற்றை திருப்பித் தரவில்லை  இந்நிலையில் 23.05.2024 இரவு 9.30 மணிக்கு நான் வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் மணிகண்டன்,  மிதுன், ஆகியோர் என்னுடைய  வீட்டில் மது போதையில் அத்துமீறி  நுழைந்து அவதூறு வார்த்தைகளால் அசிங்கமாக பேசி, என்னை அடித்து, மிதித்து தாக்கி நான் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன் என பாதிக்கப்பட்ட பெண்மணி சரோஜினி நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்து அதன் பின் செய்தியாளருக்கு தெரிவித்தார். உயிருக்கு உத்திரவாதம் கேட்டு தன் கணவர் மோகனுடன் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் பெண்  ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கந்து வட்டி கொடுமையினால் காவல் நிலையத்திற்கு உயிருக்கு பயந்து செல்லும் நபர்களை முறையாக விசாரித்து துரிதமாக நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட வேண்டும் .அப்போதுதான் குமரி மாவட்டத்தில் கந்து வட்டி கும்பல்களின் அராஜகத்தினை அடக்க முடியும், வீண் உயிர் பலிகளையும் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : கந்து வட்டி கும்பல் மிரட்டலுக்கு பயந்து

Share via