பிரபல பத்திரிக்கை நிறுவங்களின் நிறுவனர் ராமோஜி ராவ்க்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு. 

by Editor / 08-06-2024 09:44:47am
பிரபல பத்திரிக்கை நிறுவங்களின் நிறுவனர் ராமோஜி ராவ்க்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு. 

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை,தொலைக்காட்சி நிறுவங்களின்  நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னதாக உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜூன் 8) அவர் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.ராமோஜி ராவின் இறுதிச் சடங்குகளை அரசு மரியாதையுடன் நடத்த தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. தற்போது டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ரேவந்த், இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகத்திற்கு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் முதன்முறையாக ஊடகத்துறையைச் சேர்ந்த முன்னோடி ஒருவருக்கு, அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளது. அந்தப் பெருமையை ராமோஜி ராவ் பெற்றுள்ளார்.

 

Tags : பிரபல பத்திரிக்கை நிறுவங்களின் நிறுவனர் ராமோஜி ராவ்க்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு. 

Share via