கொரோனா 3-வது அலையை தடுக்க தொடர் விழிப்புணர்வு

by Admin / 03-08-2021 03:33:20pm
கொரோனா 3-வது அலையை தடுக்க தொடர் விழிப்புணர்வு



அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் சார்பில் கொரோனா 3-வது அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசின் விழிப்புணர்வு தொடர் பிரசார நிகழ்ச்சிகளின் தொடக்க விழா, அரியலூர் பஸ் நிலையத்தில் நடந்தது.

 நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமை தாங்கி, கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசினார்.
 
பின்னர் அவர் அரியலூர் பஸ் நிலையத்தில் பயணிகளிடமும், பொதுமக்களிடமும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தினார்

. மேலும் செய்தித்துறையின் தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்கள் அதிநவீன மின்னணு திரை வாகனம் மூலம் திரையிடப்பட்டதை பார்வையிட்டு, பஸ் நிலைய வணிக நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு முககவசங்களையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் கலெக்டர், விழிப்புணர்வு கருத்தை பதிவு செய்து கையெழுத்திட்டு, கொரோனா தடுப்பூசி மையத்தை பார்வையிட்டார். இதில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via