தமிழகத்தின் வளர்ச்சிக்கும் திராவிட மாடல் 2.0 நிர்வாகம் தொடரவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம்.

by Admin / 25-03-2026 01:10:02am
 தமிழகத்தின் வளர்ச்சிக்கும் திராவிட மாடல் 2.0 நிர்வாகம் தொடரவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம்.

: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி நேரடியாக போட்டியிடப் போவதில்லை என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் வரும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாது. மாறாக திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்யும். தமிழகத்தின் வளர்ச்சிக்கும் திராவிட மாடல் 2.0 நிர்வாகம் தொடரவும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம் என்று கமலஹாசன் குறிப்பு உள்ளார்.  கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மன நிறைவை  அளிக்கவில்லை. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் விரும்பவில்லை . தங்களது அடையாளமான பேட்டரி சார்ஜ் சின்னத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே கட்சியின் முடிவாக இருந்தது.  அதனால், தாங்கள் தி.மு.கவின் வெற்றிக்காக நேரடி போட்டியில் இறங்கவில்லை என்று தெரிவித்தார்.. தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் கமலஹாசனின் இந்த முடிவு உண்மையான தியாகம் என்று பாராட்டியுள்ளார்.

 

Tags :

Share via

More stories