பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்; ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் திரும்ப வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணிப்பார்கள்.
இதன்படி பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12ம் தேதி) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளை டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுநாள் (13ம் தேதி) முன்பதிவு செய்யலாம். ஜனவரி மாதம் 12ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 14ம் தேதியும், ஜனவரி 13-ம் தேதி ரயில் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் வருகிற 15-ந் தேதியும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Tags :