மாணவர்களிடையே கொரோனா தொற்று
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவி வருகிறது.
ஒடிசா மாநிலம், கெந்துஜார் மாவட்டம், சமக்பூர் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ரூபவானு மிஸ்ரா கூறுகையில், “மாணவிகளின் உடல்நிலை சீராக உள்ளது. பள்ளியில் நிலைமையும் கட்டுக்குள் உள்ளது. மருத்துவக் குழுவினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” .
Tags :