காதலியுடன் பேச அனுமதிக்காததால் இளைஞன் கொலை
டெல்லியில் காதலியுடன் பேச அனுமதிக்காததால், 18 வயது இளைஞரை ஐந்து பேர் கும்பல் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ராகுல் என்ற 18 வயது இளைஞரை குத்திக் கொன்ற பின் தலைமறைவான ஐந்து பேரையும் போலீசார் விரைந்து பிடித்தனர். இதில் 3 பேர் 18 வயது நிரம்பாத சிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். குற்றவாளிகளில் ஒருவருக்கு கொலை செய்யப்பட்ட இளைஞருடன் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அம்பேத்கர் நகரில் கடந்த தினம் இரவு 10 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.
Tags :



















